Advertisement

ராணி எலிசபெத் உடல் இன்று (திங்கட்கிழமை) நல்லடக்கம்

By: vaithegi Mon, 19 Sept 2022 08:11:32 AM

ராணி எலிசபெத் உடல்  இன்று (திங்கட்கிழமை)  நல்லடக்கம்

லண்டன்: ராணி எலிசபெத் உடல் இன்று நல்லடக்கம் .... இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்து, உலகையே கவர்ந்தவர் இரண்டாம் எலிசபெத். ராணி எலிசபெத் மரணம் இவர், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் விடுமுறையை கழித்து வந்த நிலையில், கடந்த 8-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96. ராணியின் திடீர் மரணம், அந்த நாட்டு மக்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதனையடுத்து ராணியின் மறைவையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் (73) அந்த நாட்டின் மன்னர் ஆனார். ராணிக்கு அஞ்சலி ராணியின் உடல் பால்மோரல் கோட்டையில் இருந்து, ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், லண்டன் எடுத்துசெல்லப்பட்டது.

அங்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டு அரச குடும்பத்தினரும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர். கடந்த 14-ந் தேதி மாலை முதல் ராணியின் உடல் அடங் கிய சவப்பெட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதனை அடுத்து அதன் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு தொடர்ந்து 4 நாட்கள் பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வந்து, கடும் குளிரிலும் இரவு பகலாக வரிசையில் காத்து நின்று, ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கொண்டு வருகிறார்கள்.

queen elizabeth,nalladakkam ,ராணி எலிசபெத் ,நல்லடக்கம்

உடல் நல்லடக்கம்:

ராணி எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச்செல்லப்படுகிறது. மேலும் அதனுடன் மன்னர் சார்லசும், இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் செல்கிறார்கள்.

தொடர்ந்து ராணியின் உடல், விண்ட்சார் கோட்டைக்கு அருகே உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி 'ராயல் வால்ட்' என அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும். இறுதியில், அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க பிரார்த்தனை, மன்னர் 6-ம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடக்கிறது. அதன் பின் ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.

Tags :