Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்

கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்

By: vaithegi Fri, 09 Sept 2022 1:26:20 PM

கியூட்  நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்

இந்தியா: இந்தியாவில் நடப்பு கல்வியாண்டுக்கான கியூட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 31ம் தேதி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து தேர்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 500 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 2 நகரங்களிலும் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற்றது.

மேலும் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது . இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி அல்லது அதற்க்கு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (UCG) தலைவர் தெரிவித்துள்ளார்.

quet entrance exam,results ,கியூட்  நுழைவுத் தேர்வு ,

மேலும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கான இணையத்தளத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று கியூட் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. அத்துடன் தேர்வரின் OMR விடைத்தாளையும், இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகளையும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது.

இதை அடுத்து இந்த உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தேர்வர்கள் நாளை இரவு 11.50 மணிக்குள் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு செயல்முறை கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்.

Tags :