Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கம்

பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கம்

By: Karunakaran Wed, 19 Aug 2020 5:28:24 PM

பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கம்

ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பாக பார்சிலோனா அணி உள்ளது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் குயிக் சேட்டின் கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா அணி 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் தோல்வியடைந்தது.

இந்த தோல்வி, கடந்த 74 ஆண்டுகளில் பார்சிலோனா அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது. இதனால் தற்போது, பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

quick chat,abrupt,barcelona coach,charge,removal ,குயிக் சேட், பார்சிலோனா பயிற்சியாளர்,கட்டணம், நீக்கம்

புதிய பயிற்சியாளராக நெதர்லாந்து முன்னாள் வீரர் 57 வயதான ரொனால்டு கோமேன் நியமிக்கப்படவுள்ளார். இதனால் அவர் தற்போது நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகவுள்ளார். பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன் ரொனால்டு கோமேன் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

2020-21-ம் ஆண்டு கால்பந்து சீசனுக்கு குறிப்பிட்ட சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும், மூத்த வீரர் லூயிஸ் சுவாரசை கழற்றி விட வேண்டும் என ரொனால்டு கோமேன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அந்த அணியை விட்டு விலக விரும்புவதாக மீண்டும் தகவல்கள் கசிந்துள்ளன.

Tags :
|
|