Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

சென்னை கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

By: vaithegi Tue, 24 Oct 2023 09:14:24 AM

சென்னை கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில்  இருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

சென்னை: செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “காவல்துறை, தீயணைப்புத் துறைபோல சென்னை மாநகராட்சியும் 24 மணி நேரமும் பணி செய்கிறது. இரும்புக் கட்டுமானங்களை அடித்தளமாக பயன்படுத்தி தி.நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் சிஐடி நகர் முதல் பிரதான சாலை வரை 131 கோடி மதிப்பில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பாலத்தின் அடித்தளத்தை சிமெண்டில் அமைத்தால் அப்பணி முடிய 1 வாரம் ஆகும். ஆனால் இரும்பு கட்டுமானத்தை பயன்படுத்துவதால் ஒரே நாளில் பாலத்தின் அடித்தள பணி முடியும்.

radhakrishnan,heavy rain ,ராதாகிருஷ்ணன் ,கனமழை

அடுத்தாண்டு செப்டம்பருக்குள் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மே மாதத்திற்குள் பாலப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னையில் 33 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் இருக்கிறது. சென்னையில் மொத்தம் உள்ள மழைநீர் வடிகால் அளவில் ஒரு விழுக்காட்டுக்கும், குறைவான அளவிலேயே பணி நிறைவடையாமல் உள்ளது.

சென்னையில் 37 இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதியாக உள்ளது. அங்கு மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் இருக்கின்றனர்” என அவர் கூறினார்.

Tags :