Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • .ரேஷன் கடைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அரிசி கடத்தல் தடுக்கப்படும் .... ராதாகிருஷ்ணன்

.ரேஷன் கடைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அரிசி கடத்தல் தடுக்கப்படும் .... ராதாகிருஷ்ணன்

By: vaithegi Thu, 15 Sept 2022 6:38:13 PM

.ரேஷன் கடைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அரிசி கடத்தல் தடுக்கப்படும்   ....  ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் செயல்படும் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தும் கடத்தல் முதலைகளையும்இடைத்தரகர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ரேஷன் கடைகளில் மிக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அரிசி கடத்தல் தடுக்கப்படும்.

ration shop,surveillance cameras,radhakrishnan ,ரேஷன் கடை,கண்காணிப்பு கேமராக்கள் ,ராதாகிருஷ்ணன்

மேலும் அரிசி ஆலை உரிமையாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரேசன் அரிசியை உற்பத்தி செய்யப்படும் அரிசி ஆலைகள் மட்டும் இன்றி மொத்தமாக உள்ள அனைத்து அரிசி ஆலைகளிலும் கடத்தலை தடுக்கும் வகையில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும் மற்ற மாநிலங்களைவிட இந்தப் பருவத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். 109 திறந்த வெளி குடோன்கள் செயல்படுகிறது. இதனை தொடர்ந்து அதை சிறந்த முறையில் மாற்றுவதற்கு முதல்-அமைச்சர் 238 கோடி ரூபாய் ஒதுக்கி 20 இடங்களில் நிரந்தர குடோன்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மூன்றறை லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது என அவர் கூறினார்.

Tags :