Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன

இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன

By: Nagaraj Thu, 10 Sept 2020 2:03:43 PM

இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன

ரபேல் விமானங்கள் இணைப்பு.. பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டன.

ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். விமானப் படையில் இணைக்கப்படும் ஐந்து ரஃபேல் போர் விமானங்களுக்கும் அனைத்து மத வழிபாட்டுடன் பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர், இந்திய விமானப் படையில், ஐந்து ரஃபேல் போர் விமானங்களும் முறைப்படி இணைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், இந்திய விமானப் படை வீரர்கள் பல்வேறு விமான சாகசங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

raphael,merger ceremony,air force,india,defense ,ரபேல், இணைப்பு விழா, விமானப்படை, இந்தியா, பாதுகாப்புத்துறை

முன்னதாக, ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் தொகுதியாக 5 போா் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. அந்த 5 ரஃபேல் போா் விமானங்களையும் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் பிளாரன்ஸ் பாா்லி, முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

மேலும், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது ரஃபேல் போா் விமானங்கள் தேஜஸ் போா் விமானங்கள் உள்ளிட்டவை மூலமாக விமானப்படை வீரா்கள் சாகசங்களில் ஈடுபட்டனர்.

Tags :
|