Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதைப்பொருள் வழக்கில் கைதான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

போதைப்பொருள் வழக்கில் கைதான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

By: Karunakaran Wed, 04 Nov 2020 09:07:29 AM

போதைப்பொருள் வழக்கில் கைதான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சீனப்பா நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அனைத்து தடவையும் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து இருந்தார்.

ragini dwivedi,sanjana kalrani,bail,drug case ,ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, ஜாமீன், போதை மருந்து வழக்கு

தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதுபோல இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரசாந்த் ரங்காவும் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார் முன்னிலையில் நடந்தபோது, அரசு சார்பில் ஆஜரான வக்கீல் நடிகைகளுக்கு ஜாமீன் வழங்கினால், அவர்கள் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நடிகைகளின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுபோல பிரசாந்த் ரங்காவின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் நடிகைகள் இருவரும், 2 நீதிபதிகள் அடங்கிய ஐகோர்ட்டு அமர்வில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|