Advertisement

பெங்களூருக்கு வந்து சேர்ந்தார் ராகுல் காந்தி

By: Nagaraj Wed, 30 Aug 2023 5:58:32 PM

பெங்களூருக்கு வந்து சேர்ந்தார் ராகுல் காந்தி

பெங்களூர்: பெங்களூர் வந்த ராகுல்... கர்நாடகத்தில் புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் பொருட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு வந்தடைந்தார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளில் அளித்த முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் குடும்ப லட்சுமி திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோா் இன்று தொடங்கி வைக்கின்றனர்.

congress,bangalore,rahul gandhi,chief minister siddaramaiah ,
காங்கிரஸ், பெங்களூர், ராகுல்காந்தி, விழா, முதல்வர் சித்தராமையா

இதன் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மைசூரில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள ராகுல் காந்தியும் இன்று பிற்பகல் பெங்களூரு வந்தார்.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Tags :