Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு அழைப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு அழைப்பு

By: Karunakaran Sun, 27 Sept 2020 09:23:16 AM

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு அழைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனை சீரழிக்கும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. மேலும், விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக கூறி வருகிறது.

இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகளுக்காக குரல் கொடுக்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ‘விவசாயிகளுக்காக பேசுங்கள்’ என்ற பிரசாரத்தை அவர் சமூக வலைத்தளங்களில் நேற்று தொடங்கி உள்ளார்.

rahul gandhi,country,protest,agricultural bills ,ராகுல் காந்தி, நாடு, எதிர்ப்பு, விவசாய பில்கள்

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில், விவசாயிகள் மீது மோடி அரசு நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் சுரண்டலை எதிர்த்து இணைந்து குரல் கொடுப்போம். விவசாயிகளுக்காக பேசுங்கள் என்ற இந்த பிரசாரத்தில், உங்கள் வீடியோ பதிவுடன் இணையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி வெளியிட்டு இருந்தார். அதில், மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் நமது விவசாயிகள் மீதான தாக்குதல் மற்றும் விவசாயத்தை அவர்களின் கார்பரேட் நண்பர்களுக்கு மாற்றும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

Tags :