Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு உயர்ந்தது குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு உயர்ந்தது குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

By: Karunakaran Mon, 06 July 2020 12:39:33 PM

கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு உயர்ந்தது குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஆசிய கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.

இந்தியாவில் சுமார் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மார்ச் 25-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் அதன்பின் கொரோனாவில் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இதற்கு காரணம் ஊரடங்கை சரியான வழியில் பயன்படுத்தவில்லை என மத்திய அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

corona virus,rahul gandhi,india,corona prevalence ,கொரோனா வைரஸ், ராகுல் காந்தி, இந்தியா, கொரோனா பாதிப்பு

தற்போது உலகளவில் கொரோனா அதிகம் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளது. தற்போது ரஷியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது. மத்திய அரசின் எதிர்கால திட்ட கணிப்புகள் தோல்வி என்பது ஆய்வில் தகவல்
1. கொரோனா வைரஸ் தொற்று
2. பண மதிப்பிழப்பு
3. ஜிஎஸ்டி அமல் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|