Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை

பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை

By: Nagaraj Fri, 07 Apr 2023 6:20:17 PM

பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை

பெங்களூரு: ராகுல்காந்தி பாடம் கற்கவில்லை... பிரதமர் மோடிக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்கவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:- அதானி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாக ராகுல் காந்தி நினைத்தால் அது உண்மையல்ல.

interview,lesson,nirmala sitharaman,not learned,rahul gandhi,union minister ,கற்கவில்லை, நிர்மலா சீதாராமன், பாடம், பேட்டி, மத்திய மந்திரி, ராகுல் காந்தி

பிரதமர் மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தொடர் குற்றவாளியாக மாறியுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இப்படிப் பேசினார். தற்போது மீண்டும் பொய் சொல்ல ஆரம்பித்துள்ளார். பிரதமர் மீது பொய் வழக்குகள் போடுவதில் இருந்து அவர் பாடம் கற்றதாக தெரியவில்லை.

கேரளாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி இல்லை. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. திஅந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு ராகுல் காந்தியே கேட்க வேண்டியது தானே? இதை வலியுறுத்த அவரை எது தடுக்கிறது? ராஜஸ்தானில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திட்டமும் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து ராகுல் காந்தி பேசாமல் இருப்பது ஏன்? இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags :
|