Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல் காந்தி வருகிற 11ம் தேதி வயநாட்டிற்கு செல்ல உள்ளார்

ராகுல் காந்தி வருகிற 11ம் தேதி வயநாட்டிற்கு செல்ல உள்ளார்

By: vaithegi Sat, 01 Apr 2023 3:55:41 PM

ராகுல் காந்தி வருகிற 11ம் தேதி வயநாட்டிற்கு செல்ல உள்ளார்

இந்தியா: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்கு பிறகு அடிக்கடி தொகுதிக்கு சென்று வந்த ராகுல்காந்தி, அங்கு வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார்.

இதனால் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையாகவே மாறினார். இந்த நிலையில் மோடி பெயர் பற்றி பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இஇதனை யடுத்து ராகுல் காந்தியின் எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

rahul gandhi,wayanad ,ராகுல் காந்தி,வயநாடு

ராகுலின் சொந்த தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தீபந்தம் ஏந்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல் ஆகியவற்றை நடந்தன. தனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் வயநாட்டை மறக்கமாட்டேன் என்று ராகுல்காந்தி கூறியிருந்தார். அது எனது சொந்த தொகுதி எனவும், அங்குள்ள மக்களை சந்திக்க செல்வேன் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் வருகிற 11-ம் தேதி ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வர இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்திருக்கிறார்.

இதையடுத்து இது தொடர்பாக அவர் பேசியதாவது, “ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் அவரது தொகுதி வயநாடு தான். தொகுதி மக்கள் மீது அவர் அளப்பரிய அன்பு வைத்துள்ளார். அதனால் தொகுதி மக்களை சந்திக்க வருகிற 11-ம் தேதி வயநாடு வருகிறார். அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சி சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் வயநாட்டில் வாழும் மக்களுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை வீடு, வீடாக வினியோகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய அளவில் 19 கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் பங்கேற்றதற்கு காங்கிரஸ் பெருமிதம் கொள்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக போராட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் காங்கிரஸ் கைகோர்க்கும்” என அவர் தெரிவித்தார்.

Tags :