Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீஹார் தேர்தலுக்காக பிரசாரத்தை துவக்கி வைக்கிறார் ராகுல்காந்தி

பீஹார் தேர்தலுக்காக பிரசாரத்தை துவக்கி வைக்கிறார் ராகுல்காந்தி

By: Nagaraj Thu, 06 Aug 2020 07:33:00 AM

பீஹார் தேர்தலுக்காக பிரசாரத்தை துவக்கி வைக்கிறார் ராகுல்காந்தி

பீஹார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை ஒட்டி தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்தை கேட்டு வரும் நிலையில், இன்று காங். எம்.பி. ராகுல் , தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

rahul gandhi,bihar,propaganda,video conference,information ,ராகுல்காந்தி, பீஹார், பிரசாரம், வீடியோ கான்பரன்ஸ், தகவல்

வீடீயோ கான்பரன்சிங் மூலம் பீஹார் மாநில மாவட்ட காங். தலைவர்களுடன் உரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை காங். செய்து வருகிறது. முன்னதாக கடந்த ஜூன் 7-ம் தேதி பா.ஜ. மூத்த தலைவர் அமித்ஷா தனது பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

இந்த சூழ்நிலையில் காங். எம்.பி. ராகுல் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளதாக மாநில தலைவர் சக்தி சிங் கோலி தெரிவித்துள்ளார்.

Tags :
|