Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிராக்டரில் சோபாவில் அமர்ந்து செல்லும் ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்

டிராக்டரில் சோபாவில் அமர்ந்து செல்லும் ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்

By: Karunakaran Tue, 06 Oct 2020 6:28:04 PM

டிராக்டரில் சோபாவில் அமர்ந்து செல்லும் ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3 நாள் டிராக்டர் பேரணி நேற்று முன்தினம் தொடங்கியது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த வேளாண் சட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என ராகுல் காந்தி கூறினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் பஞ்சாபில் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். இந்த டிராக்டர் பேரணியை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.

rahul gandhi,sofa,tractor,smriti irani ,ராகுல் காந்தி, சோபா, டிராக்டர், ஸ்மிருதி இரானி

இதுகுறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறுகையில், ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்துகிறார். அவரை போன்ற ‘வி.ஐ.பி. விவசாயி’களால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்று கூறினார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்கள் குப்பையில் போடப்படும் என்று ராகுல்காந்தி கூறியது பற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ஸமிரிதி இரானி, ஆட்சிக்கு வரும் ராகுல்காந்தியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|