Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போர்ட்டர்கள் சட்டையை அணிந்து சுமையை தூக்கிய ராகுல்காந்தி

போர்ட்டர்கள் சட்டையை அணிந்து சுமையை தூக்கிய ராகுல்காந்தி

By: Nagaraj Thu, 21 Sept 2023 10:59:50 PM

போர்ட்டர்கள் சட்டையை அணிந்து சுமையை தூக்கிய ராகுல்காந்தி

புதுடில்லி: ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு சென்று போர்ட்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, போர்ட்டர்கள் அணிந்திருந்த சிவப்பு சட்டையை அணிந்து, கையில் இருந்த சுமையை தூக்கினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி நாடு தழுவிய பாத யாத்திரை மேற்கொண்டார். பின்னர் பல்வேறு தரப்பு மக்களை தொடர்பு கொண்டு உரையாற்றினார். விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களை பழுது பார்ப்பது போன்ற செயல்களில் திடீரென ஈடுபட்டார்.

gandhi meets,porter at delhi railway,rahul gandhi, ,சிவப்புச் சட்டை, டெல்லி ரயில் நிலையம், ராகுல் காந்தி

அந்த வகையில் இன்று ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் போர்ட்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, போர்ட்டர்கள் அணிந்திருந்த சிவப்பு சட்டையை அணிந்து, கையில் இருந்த சுமையை தூக்கினார்.

அந்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ், “மக்கள் தலைவர் ராகுல் காந்தி, தனது போர்ட்டர் நண்பர்களை சந்தித்தார். சமீபத்தில், ரயில்வே ஸ்டேஷன் போர்ட்டர் நண்பர்கள் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tags :