Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2024 பொதுத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கடும் சவாலாக இருப்பார்

2024 பொதுத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கடும் சவாலாக இருப்பார்

By: Nagaraj Sun, 22 Jan 2023 11:23:10 AM

2024 பொதுத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கடும் சவாலாக இருப்பார்

ஸ்ரீநகர்: 2024 பொதுத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கடும் சவாலாக இருப்பார். இந்தியாவின் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது என்று சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல 150 நாட்கள் ஆகும். இந்த பாதயாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி பல மாநிலங்கள் வழியாக சென்ற ராகுல் காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. ஜம்முவின் சந்த்வால் பகுதியில் இன்று பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பங்கேற்றார்.

india,prime minister,rahul gandhi,sanjay rawat,shiv sena, ,இந்தியா, சஞ்சய் ராவத், சிவசேனா, பிரதமர், ராகுல்காந்தி

ராகுல் காந்தியுடன் சஞ்சய் ராவத் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தியுடன் 13 கி.மீ. தூரம் நடந்து சென்ற சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சித்தாந்தம் மற்றும் அரசியல் வேறுபாடுகள் இருந்த போது ராகுல் காந்தி தற்போது தனது ஆளுமை பண்புகளை வெளிப்படுத்தியுள்ளார். 2024 பொதுத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கடும் சவாலாக இருப்பார்.

ராகுல் காந்தி அற்புதம் செய்வார். இந்தியாவின் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் வரை அனைவரும் நடக்க முடியாது.இதற்கு வலுவான மன உறுதியும் நாட்டின் மீது அன்பும் தேவை. ராகுல் காந்தி நாட்டின் மீது கவலை தெரிவித்துள்ளார்.

இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை. பிரதமர் ஆக விரும்பவில்லை என்று ராகுல் காந்தி ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அவருக்கு வேறு வழியில்லை.

Tags :
|