Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பரில் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி

செப்டம்பரில் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி

By: Nagaraj Thu, 31 Aug 2023 7:37:55 PM

செப்டம்பரில் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி

புதுடில்லி: செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ராகுல்காந்தி ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் முதல் வாரத்தில் ஐரோப்பா செல்கிறார். 5 நாள் பயணமாக அவர் செல்கிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் ராகுல் காந்தி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் செல்கிறார்.

அங்கு வரும் 7ம் தேதி ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்திக்கிறார். மறுநாள் (8ம் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார். அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார். 9ம் தேதி பாரிசில் பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

europe,first week,month,rahul gandhi,september,tour ,ஐரோப்பா, சுற்றுப்பயணம், செப்டம்பர், மாதம், முதல் வாரம், ராகுல்காந்தி

பின்னர், நார்வேயின் ஆஸ்லோவுக்கு ராகுல் காந்தி செல்கிறார். கடந்த 10ம் தேதி இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்திய வம்சாவளி பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

பத்திரிகையாளர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சியும் உள்ளது. இந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது, ராகுல் காந்தி ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Tags :
|
|