Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சதத்தை நெருங்குகிறது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை

சதத்தை நெருங்குகிறது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை

By: Nagaraj Tue, 13 Dec 2022 8:35:00 PM

சதத்தை நெருங்குகிறது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை

ஷிம்லா: சதத்தை நெருங்குகிறது... தமிழகத்தில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து, தற்போது ராஜஸ்தானில் நடைபயணத்தைத் தொடர்கிறார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி 100வது நாளான வரும் 16ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகி சுனிதி சவுகான் தலைமையிலான இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

continuing,kanyakumari,rahul gandhi,through the states, ,ஒற்றுமை யாத்திரை, கன்னியாகுமரி, தமிழகத்தின், ராகுல் காந்தி

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த முக்கியமான 100 நாள் யாத்திரையில் பங்கேற்கின்றனர்.

இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரைக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் நமோநாராயண் மீனா, பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை இந்த யாத்திரை மூலம் ராகுல் காந்தி அம்பலப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags :