Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவராகும் வாய்ப்பு உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவராகும் வாய்ப்பு உறுதி

By: Karunakaran Sun, 13 Sept 2020 3:15:38 PM

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவராகும் வாய்ப்பு உறுதி

சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பான தலைமை தேவை என கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் கடிதம் எழுதியது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடத்துமாறும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டியை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் அதிரடியாக மாற்றியமைத்தார்.

கட்சியின் பொதுச்செயலாளர்கள் மாற்றம், கட்சியை வழிநடத்துவதற்கு தலைமைக்கு ஆலோசனை வழங்க சிறப்பு குழு அமைப்பு என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. கடிதம் எழுதிய தலைவர்களில் ஒருசிலரை தவிர மீதமுள்ளவர்கள் யாரும் புதிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதிலும் அந்த குழுவில் முக்கியமானவரான குலாம் நபி ஆசாத்திடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

rahul gandhi,re-election,congress party,senior leaders ,ராகுல் காந்தி, மறுதேர்தல், காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர்கள்

குழுவில் இடம் பெற்றிருந்த கபில்சிபல், சசிதரூர், மணிஷ் திவாரி போன்ற முக்கியமானவர்களும் புதிய பதவிகளுக்கு கண்டுகொள்ளப்படவில்லை. முகுல் வாஸ்னிக் மட்டுமே முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் என அறியப்படுபவர்கள் ஆவர். அந்தவகையில் காரியக்கமிட்டியின் 26 நிரந்தர அழைப்பாளர்களில் 11 பேர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் ஆவர்.

இதனால் காங்கிரசில் ராகுல் காந்தியின் நிலையை சோனியா காந்தி மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஸ்வனி குமார் கூறுகையில், சிறப்பு கமிட்டியின் பதவிக்காலம் குறுகிய நிலையில் இருப்பதால், மிக விரைவில் கட்சிக்கு புதிய தலைமை கிடைக்கும் என தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :