Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயங்கவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிப்பு

தீபாவளிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயங்கவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிப்பு

By: vaithegi Wed, 08 Nov 2023 3:44:06 PM

தீபாவளிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயங்கவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 10,975 சிறப்பு பேருந்துகள் இயங்கள்ளது.

எனவே இதன் தொடர்ச்சியாக, சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளுக்கு ஏதுவாக சிறப்பு கட்டண ரயில்களும் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான நேரம், இடம் தொடர்பான விவர பட்டியலையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

railway administration,diwali,special fare trains ,ரயில்வே நிர்வாகம் ,தீபாவளி, சிறப்பு கட்டண ரயில்கள்


அதாவது, வரும் நவ.10 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக இரவு 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இதற்கு அடுத்ததாக, நவ.12 ஆம் தேதி மங்களூரிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் வழியாக அதிகாலை 5.10க்கு தாம்பரத்தை சென்றடையும். அடுத்ததாக, நவ.11 ஆம் தேதி மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு குளித்துறை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், கண்ணுார் வழியாக சென்று காலை 5.15 க்கு மங்களூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|