Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெயிட்டிங் லிஸ்ட்டில் பயணிகள் காத்திருக்க தேவையில்லாத வகையில் ரயில்வே நிர்வாகம் திட்டமிடல்

வெயிட்டிங் லிஸ்ட்டில் பயணிகள் காத்திருக்க தேவையில்லாத வகையில் ரயில்வே நிர்வாகம் திட்டமிடல்

By: vaithegi Tue, 21 Nov 2023 10:31:34 AM

வெயிட்டிங் லிஸ்ட்டில் பயணிகள் காத்திருக்க தேவையில்லாத வகையில் ரயில்வே நிர்வாகம்  திட்டமிடல்

சென்னை: இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது ..... பேருந்துகளை காட்டிலும் ரயிலில் மிக குறைவான கட்டணம் என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

இதனால், ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யும் போது பயண டிக்கெட் உறுதி செய்யப்படாமல் வெய்டிங் லிஸ்டில் வைக்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குவுள்ளாகின்றனர்.

railway administration,waiting list,passengers ,ரயில்வே நிர்வாகம் ,வெயிட்டிங் லிஸ்ட்,பயணிகள்

இந்த நிலையில், வெயிட்டிங் வைக்காமல் பயணிகள் நேரடியாகவே பயண டிக்கெட்டை உறுதி செய்யும் முயற்சியாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

அதாவது, மக்கள்தொகை அதிகரிப்பிற்கு தகுந்தவாறு அடுத்தாண்டுகளில் 3000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே 200 முதல் 250 புதிய ரயில்களை இணைக்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags :