Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டனில் 11% சம்பள உயர்வு வழங்க கோரி ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

பிரிட்டனில் 11% சம்பள உயர்வு வழங்க கோரி ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

By: vaithegi Wed, 22 June 2022 12:35:39 PM

பிரிட்டனில் 11% சம்பள உயர்வு வழங்க கோரி ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

பிரிட்டன்: கொரோனா பரவலுக்கு பின் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சில்லறை பணவீக்கம் உச்சஅளவை எட்டியுள்ளது. சில்லறை பணவீக்க உயர்வுக்கு உணவுப் பொருட்கள் முக்கியக் காரணமாக உள்ளது.

டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜனவரி மாதம் முதல் தானியங்கள், முட்டை, பால் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தை தொடர்ந்து தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை மிக கடுமையாக உயர்ந்து வருவது புதிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பீப்பாய் 95 டாலரை எட்டியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வது பணவீக்கத்தை தூண்டும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் பல மடங்கு அதிகரித்து விட்ட செலவீனங்களை எதிர்கொள்ளும் விதமாக சம்பளத்தை 11% அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரிட்டன் ரயில்வே ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கைக்கு, போரிஸ் ஜான்சன் அரசு தரப்பில் இருந்து சரியான விளக்கம் தரப்படாதை அடுத்து திங்கட்கிழமை முதல் பிரிட்டன் முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் 50,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

railway employees,struggle,government salary , ரயில்வே ஊழியர்கள் ,போராட்டம்  ,அரசு சம்பளம்

இதன் அடிப்படையில் ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ரயில்கள் பனிமலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான போராட்டத்தால் பிரிட்டன் முழுவதும் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால், பிரிட்டன் ரயில்வே நிர்வாகம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை எதிர் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரயில்வே ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் தேவையில்லாத ஒன்று என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். எனவே ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார் என்று பிரிட்டன் பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல்ஒன்று வெளியாகி உள்ளது

Tags :