Advertisement

புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல்3 நாட்களுக்கு மழை

By: vaithegi Fri, 15 Sept 2023 11:35:12 AM

புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல்3 நாட்களுக்கு மழை

புதுச்சேரி : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-வடமேற்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி,

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிசா-மேற்கு வங்கப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

rainy,puducherry ,மழை ,புதுச்சேரி

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல்3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோன்று, வரும் 18, 19,20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|