Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை

By: vaithegi Sat, 16 Sept 2023 11:44:47 AM

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை


சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,

மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 3 அல்லது 4 தினங்களில் மேற்கு திசையில் நகரக்கூடும்.

director of rain and meteorological research centre ,மழை ,வானிலை ஆய்வு மைய இயக்குநர்

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. எனவே இதன் காரணமாக 16, 17 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து வருகிற 18, 19, 20 தேதிகளில் ஓரிருஇடங்களிலும், 21-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :