Advertisement

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

By: vaithegi Sun, 23 Oct 2022 3:14:33 PM

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை

சென்னை: 5 நாட்களுக்கு மழை .... தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அக். 27ம்தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று தென் கிழக்கு மற்றும்‌ மத்துய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. ஓரிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌

rainy,chennai ,மழை,சென்னை

அதை தொடர்ந்து நாளை மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும் வடக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல்‌ 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேலும் அக்.25 அன்று வடக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல்‌ 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 110 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுள்ளது.

Tags :
|