Advertisement

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

By: vaithegi Fri, 07 Apr 2023 3:52:12 PM

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

சென்னை: தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் வெப்பத்தை போக்கும் விதமாக சமீப காலத்தில் அங்கங்கே மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ... கோடை வெப்பம் பகல் நேரத்தில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தாலும், மாலை நேரத்திற்கு பிறகு மழை பொழிந்து வெப்பத்தை குறைத்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து தமிழகத்தின் தெற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை அல்லது லேசான மழை இன்றும், நாளையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

rainy,south indian region,southern districts ,மழை,தென் இந்திய பகுதி,தெற்கு மாவட்டங்கள்

மேலும், வருகிற ஏப்ரல் 9,ம் 10 மற்றும் 11ம் தேதிகளில் இதே பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், மீனவர்களுக்கான குறிப்பிட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|