Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு

வருகிற 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 01 Apr 2023 3:10:31 PM

வருகிற 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதன் காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும்

இதனை அடுத்து சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

tamil nadu,puducherry,rain ,தமிழகம், புதுச்சேரி,மழை

மேலும் இந்த அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதனால், இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதே போன்று, வருகிற 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அறிக்கையில் , மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் குறிப்பிடப்படவில்லை.

Tags :