Advertisement

நெல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை

By: Monisha Fri, 13 Nov 2020 3:48:52 PM

நெல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை

நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. சில நேரம் கனமழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 63 மில்லிமீட்டர் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 57 மில்லிமீட்டர் மழை பதிவானது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரம் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. மழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார்கோவில் ஆகிய அணைகளுக்கு தொடர்ந்து குறைந்த அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. குண்டாறு அணை மட்டும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

rain,dam,flood,beach,salinity ,மழை,அணை,வெள்ளம்,கடற்கரை,உப்பளம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர்வரத்து குளங்கள் மற்றும் மானாவாரி குளங்கள் என 2,500 குளங்கள் உள்ளன. இதில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தென்காசி மாவட்டங்களில் உள்ள பல குளங்கள் நிரம்பின.

பாபநாசம் அணையில் இருந்து தற்போதுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்வரத்து குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களுக்கும் தற்போதுதான் தண்ணீர் வரதொடங்கியுள்ளது. இதுபோல தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் குளங்கள் நிரம்பும் என்று கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|