Advertisement

அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 14 Dec 2022 2:57:23 PM

அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

சென்னை: மழை பெய்யக்கூடும் ... சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (14.12.2022) வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து (15.12.2022 முதல் 18.11.2022) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

rain,chennai meteorological centre ,மழை , சென்னை வானிலை ஆய்வு மையம்

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|