Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் மழை பெய்யகூடுமாம்

இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் மழை பெய்யகூடுமாம்

By: vaithegi Fri, 20 Oct 2023 1:58:08 PM

இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில்  மழை பெய்யகூடுமாம்


சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும். இதையடுத்து இது நாளை (அக். 21) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

rain,south tamil nadu,north tamil nadu,puducherry ,மழை ,தென் தமிழகம், வட தமிழகம், புதுச்சேரி


அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|