Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 25 June 2023 10:21:09 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துயிருந்தது. இதேபோன்று நாளை முதல் வருகிற 28.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து இருந்தது.

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

rainy,tamil nadu,puducherry ,மழை ,தமிழகம் ,புதுச்சேரி


அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|