Advertisement

தமிழகத்தில் மழை தொடரும்..

By: Monisha Mon, 04 July 2022 9:10:12 PM

தமிழகத்தில் மழை தொடரும்..

தமிழ்நாடு: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டித்திர்த்த மழை. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளயும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை பெய்து வருவதால் வெட்கை தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மழை பெய்வதனால் அனைவரும் மகிழிச்சி அடைந்தாலும் ஒரு பக்கம் வாகனம் ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

நேற்று இரவு கொட்டி தீர்த்த மழை. இதனால் சாலைஓரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலையில் செல்கின்ற அனைவரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

rain,water,continue,road , மழை, வானிலை,வெட்கை, இடி,

நீலகிரி, கோவை,திருப்பூர்,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் மற்றும் குமரி வளைகுடா பகுதி , தமிழக-ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று தெரிவித்து உள்ளனர்.
சென்னயில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டதுடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags :
|
|