Advertisement

தமிழகத்தில் இன்னும் மழை நீடிக்கும்

By: vaithegi Tue, 13 Dec 2022 7:08:33 PM

தமிழகத்தில் இன்னும் மழை நீடிக்கும்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் டிசம்பர் 13, 14, 15,1 6, 17 ஆகிய நாட்களில் மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தூது இன்று (டிச.13) லட்சதீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌, தென்கிழக்கு மற்றும்‌ மத்தியகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

rain,chennai ,சென்னை,மழை

அதே போன்று டிச.14ம் அன்று லட்சதீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌, தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 15 மற்றும் 16ம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Tags :
|