Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 03 Oct 2023 10:42:19 AM

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ... சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால்

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,puducherry,tamil nadu ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி

தமிழக கடலோரப் பகுதிகள்மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|