Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 202 இடங்களில் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 202 இடங்களில் மழை

By: Monisha Fri, 11 Sept 2020 10:22:59 AM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 202 இடங்களில் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 202 இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது.

அதிலும் நேற்றுமுன்தினம் மட்டும் ஒரே நாளில் தமிழகத்தில் 202 பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 21 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இதோடு சேர்த்து தமிழகத்தில் 202 இடங்களில் மழை பெய்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

tamil nadu,meteorology,chennai meteorological center,nilgiris,temperature ,தமிழ்நாடு,வானிலை,சென்னை வானிலை ஆய்வு மையம்,நீலகிரி,வெப்பசலனம்

இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக, இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

Tags :