Advertisement

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

By: Monisha Sat, 13 June 2020 5:13:56 PM

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்கிறது.

இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

meteorological center,coimbatore,nilgiris,tirunelveli,thoothukudi,kanyakumari ,வானிலை ஆய்வு மையம்,கோவை,நீலகிரி,திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :