Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூதலூர் ரயிலடி சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்... கண்டித்து சாலைமறியல்

பூதலூர் ரயிலடி சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்... கண்டித்து சாலைமறியல்

By: Nagaraj Mon, 20 June 2022 8:06:03 PM

பூதலூர் ரயிலடி சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்... கண்டித்து சாலைமறியல்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூர் ரயிலடி சுரங்கப்பாதையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசிய மழை நீரை அகற்ற வலியுறுத்தி நடந்த சாலைமறியல் அதிகாரிகள் பேச்சுவார்தையை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பூதலூர் ரயிலடி சுரங்கப்பாதையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் மழை நீர் அகற்றப்படவில்லை.

struggle,postponement,roadblock,railroad,tunnel ,ோராட்டம், ஒத்தி வைப்பு, சாலைமறியல், ரயிலடி, சுரங்கப்பாதை

இதை கண்டித்து பூதலூர் மேம்பாலம் அருகில் நேற்று மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார் தலைமையில், துணை செயலாளர் வீரசிங்கம், பொறுப்பாளர்கள் தஞ்சை செந்தில், சுந்தர்ராஜ், தமிழன் காமராஜ் ஆகியோரின் முன்னிலையில் திரளான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பூதலூர் தாசில்தார் பிரேமா உடனுக்குடன் மழைநீர் அகற்றி தரப்படும். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பேசி முறையான நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை உள்ளாட்சி நிர்வாகமே மேற்படி சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து தாசில்தார் பிரேமா பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை அடுத்து சாலைமறியல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Tags :