Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 22 July 2020 12:33:52 PM

ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

rajapalayam,dmk,mla thangapandiyan,corona confirmed ,ராஜபாளையம்,திமுக,எம்எல்ஏ தங்கபாண்டியன்,கொரோனா உறுதி

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்ட நிலையில் தற்போது தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|