Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

By: Nagaraj Tue, 22 Sept 2020 11:33:39 PM

அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தோனியின் முடிவு சறுக்கலை சந்தித்தது. இருப்பினும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று 217 ரன்களை சேஸ் செய்து 200 ரன்களை குவித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை அணி. ஷார்ஜா மைதானத்தின் சென்டிமென்ட்டை உடைக்க முடியாமல் போய் விட்டது தோனிக்கு.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 11 ரன்களில் தனது முதல் விக்கெடடை இழந்தது. இதன்பிறகு ஜோடி நேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சஞ்சு சாம்சன் ஜோடி அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சஞ்சு சாம்சன் அதிரடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகள் வீழத்தினார். பின்னர் களம் இறங்கிய சென்னை அணிக்கு முதல் சிக்ஸரை அடித்தார் ஷேன் வாட்சன்.

chennai team,duplessis,dhoni,rajasthan team ,சென்னை அணி, டூப்ளஸி, தோனி, ராஜஸ்தான் அணி

தொடர்ந்து 8வது ஓவர் முடிவில் ஷேன் வாட்சன் 33 ரன், முரளி விஜய் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சாம் குர்ரான் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ருத்ராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது.

ஆனால் மறுமுனையில் டுப்ளஸி நிலைத்து ஆடினார். அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மைதானத்தின் பல பக்கங்களிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக தெறிக்க விட்டார். தோனி 29 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.

Tags :
|