Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்சி பெயர் தொடர்பான செய்திகள் குறித்து ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்

கட்சி பெயர் தொடர்பான செய்திகள் குறித்து ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்

By: Nagaraj Tue, 15 Dec 2020 8:27:11 PM

கட்சி பெயர் தொடர்பான செய்திகள் குறித்து ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்

ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்... கட்சியின் பெயர் தொடர்பாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடவுள்ளார் ரஜினி. இதனிடையே, நேற்று (டிசம்பர் 14) தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு என்ன சின்னம் என்ற அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

இதில் 'மக்கள் சேவை கட்சி' என்ற புதிய கட்சியின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதை வைத்து, இது ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் என்று கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள், செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.

Tags :
|