Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு... அரசியல் கட்சி தொடங்குவாரா?

மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு... அரசியல் கட்சி தொடங்குவாரா?

By: Monisha Mon, 30 Nov 2020 08:28:20 AM

மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு... அரசியல் கட்சி தொடங்குவாரா?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், 'தான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29-ந் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான பரபரப்பு அறிக்கை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது. அது குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், 'வெளியான அறிக்கையில் என் உடல் நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்' என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி குறியாக மாறி போனது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக, சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

secretaries,rajinikanth,politics,party,meeting ,செயலாளர்கள்,ரஜினிகாந்த்,அரசியல்,கட்சி,கூட்டம்

இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதா என்பது குறித்தும், தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், தேர்தல் பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், கட்சியை எவ்வாறு மக்களிடம் முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தும் ஆலோசனைக்கேற்ப அவர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

Tags :
|