Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமர் கோவில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டதாக வைரலாகும் புகைப்படம்

ராமர் கோவில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டதாக வைரலாகும் புகைப்படம்

By: Karunakaran Mon, 27 July 2020 1:00:37 PM

ராமர் கோவில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டதாக வைரலாகும் புகைப்படம்

ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1989 ஆண்டு நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்த கொண்டதாக கூறும் கருப்பு வெள்ளை புகைப்படம் வைரலாகி வருகிறது.

நவம்பர் 9, 1989 ஆண்டு நடைபெற்ற பூமி பூஜை கார்த்திகை மாதத்தில் ஏகாதசி தினத்தில் நடைபெற்றது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் சடங்குகளை செய்ய குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்திருந்தது. அப்போதைய பூசாரிகள் இந்த காலத்தவர்கள் போன்று இல்லை என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rajiv gandhi,bhoomi puja,ram temple,ayodhya ,ராஜீவ் காந்தி, பூமி பூஜை, ராம் கோயில், அயோத்தி

இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படத்திற்கும் பூமி பூஜைக்கும் தொடர்புடையது இல்லை என்பதும். மாறாக இந்த புகைப்படம் புது டெல்லியை சேர்ந்த இஸ்கான் சோவியத் ஹரே கிராஷ்னாக்கள் பகவத் கீதையின் ரஷ்ய மொழி பதிப்பினை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வழங்கிய போது எடுக்கப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புகைப்படம் ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என்ற உண்மை தெரிய வந்துவிட்டது. மேலும் இந்த வைரல் பதிவுகள் போலி செய்தி என்பது தெரிய வந்துவிட்டது.

Tags :