Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிழக்கு லடாக்கை நோக்கி படைகளை வேகமாக நகர்த்தி எதிரிகளுக்கு வலுவான செய்தி அனுப்பப்பட்டதாக ராஜ்நாத் சிங் பெருமிதம்

கிழக்கு லடாக்கை நோக்கி படைகளை வேகமாக நகர்த்தி எதிரிகளுக்கு வலுவான செய்தி அனுப்பப்பட்டதாக ராஜ்நாத் சிங் பெருமிதம்

By: Karunakaran Thu, 23 July 2020 6:29:25 PM

கிழக்கு லடாக்கை நோக்கி படைகளை வேகமாக நகர்த்தி எதிரிகளுக்கு வலுவான செய்தி அனுப்பப்பட்டதாக ராஜ்நாத் சிங் பெருமிதம்

கிழக்கு லடாக்கில் கடந்த மாதம் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின், எல்லையில் போர் மூளும் பதற்றம் நிலவியது. இதனால் எல்லையில் இந்தியா, முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டது.

ராணுவத்துடன் இணைந்து இந்திய விமானப்படையும் கிழக்கு லடாக்கில் களத்தில் குதித்தது. முன்னணி விமானப்படை தளங்களில் தாக்குதல் ரக போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் என பெரும் படை குவிக்கப்பட்டது. குறுகிய நேரத்தில் அனைத்துவித படை பலத்துடன் இந்திய விமானப்படை தயாராகியது.

rajnath singh,eastern ladakh,forces,strong message ,ராஜ்நாத் சிங், கிழக்கு லடாக், படைகள், வலுவான செய்தி

இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பாராட்டு தெரிவித்துள்ளார். விமானப்படை மூத்த கமாண்டர்களுக்காக டெல்லியில் நேற்று தொடங்கிய 3 நாள் மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், கிழக்கு லடாக்கின் முன்னணி நிலைகளில் தனது போர் தளவாடங்களை வேகமாக நகர்த்தியதும் எதிரிகளுக்கு ஒரு வலுவான செய்தியை அளித்ததாக பெருமிதமாக கூறினார்.

மேலும் அவர், மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப விமானப்படையும் தயாராக வேண்டும். குறிப்பாக நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சைபர் மற்றும் விண்வெளி போன்ற களங்களில் விமானப்படையும் இயங்க வேண்டும். ராணுவ உற்பத்தியில் சுயசார்பை எட்டுவது மிகவும் அவசியம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|