Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக ராகேஷ் அஸ்தானா நியமனம்

எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக ராகேஷ் அஸ்தானா நியமனம்

By: Nagaraj Tue, 18 Aug 2020 09:29:54 AM

எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக ராகேஷ் அஸ்தானா நியமனம்

எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யபட்டுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால், இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினர்.

rakesh asthana,border security force,appointment,review ,ராகேஷ் அஸ்தானா, எல்லை பாதுகாப்பு படை, நியமனம், விமர்சனம்

சி.பி.ஐ. என்ற உயர் அமைப்பையே கேலிக் கூத்தாக்கினர். இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. இரு அதிகாரிகளின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. குஜராத் ஐ.பி.எஸ்., கேடரான ரகேஷ் அஸ்தானா தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ல் ஒய்வு பெற உள்ள நிலையில், மத்திய அரசு இப்பதவியில் இவரை நியமித்துள்ளது. இது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

Tags :