Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 30ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை: ராக்கி கயிறுகள் தயாரிப்பு பணி மும்முரம்

வரும் 30ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை: ராக்கி கயிறுகள் தயாரிப்பு பணி மும்முரம்

By: Nagaraj Mon, 28 Aug 2023 11:12:57 PM

வரும் 30ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை: ராக்கி கயிறுகள் தயாரிப்பு பணி மும்முரம்

புதுடில்லி: ரக்ஷா பந்தன் பண்டிகை... ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இந்தியா முழுவதும் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு பணி தற்போது தொடங்கி இருக்கிறது.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படக்கூடிய முக்கிய பண்டிகளில் ஒன்று ரக்ஷா பந்தன். குறிப்பாக வட மாநிலங்களில் ரக்ஷா பந்தன் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகவும், மேலும் ஒரு மாத காலம் கொண்டாடப்படும் பண்டிகையாக தற்போது மாறிவிட்டது.

அன்பு, பாசம், சகோதரத்துவம், பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் ராக்கி கயிறு பரிமாறிக் கொண்ட அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

northern states,trade,rakhi ropes,sweets,raksha bandhan,sale ,வடமாநிலங்கள், வர்த்தகம், ராக்கி கயிறுகள், இனிப்பு, ரக்ஷா பந்தன், விற்பனை

அதேசமயம் ரக்ஷா பந்தன் பண்டிகை குறித்து புராணங்களில் பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும் பிரதானமாக கூறப்படுவது கிருஷ்ண பகவான் தவறுதலாக தனது கையை கிழித்துக்கொண்ட போது திரௌபதி தன்னிடம் இருந்து துணியை கொண்டு கிருஷ்ணனுக்கு கட்டுப்போட்டு காயத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். அதனால் கிருஷ்ணன் திரௌபதிக்கு வரம் ஒன்றை அளிக்கிறார். அந்த வரத்தின் படி ஆபத்து ஏற்படும்போது திரௌபதியை பாதுகாப்பதாக கூறுகிறார்.

சூதாட்டத்தில் பஞ்சபாண்டவர்கள் தோல்வியடைய கவுரவர்கள் திரௌபதியின் ஆடையை கலைத்து மானபங்கம் செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது அவருக்கான ஆடை தொடர்ந்து கொடுத்து கிருஷ்ணன் பாதுகாப்புகிறார். இதுவே இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு என்று பொருள்.

வட மாநிலங்களில் முக்கிய பண்டிகையான ரக்ஷா பந்தன் ஆண், பெண் இருவருக்கான சகோதரத்துவம் உணர்வின் அடையாளமாக மாறிவிட்டது. இதனால் இந்தியா முழுவதுமே சகோதரத்துவத்தை வெளிப்படுத்த, பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆண், பெண் இருவரும் கையில் ராக்கி கட்டி தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாட இருப்பதால் வட மாநிலங்களில் புத்தாடைகள், பல வண்ண ராக்கி கயிறுகள், இனிப்பு ஆகியவை அதிகம் விற்பனையாகி வருகிறது. இதனால் வட மாநிலங்களில் தற்போது வர்த்தகம் அதிகரித்து இருக்கிறது.

Tags :
|
|