Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை - ராஜ்தாக்கரே

கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை - ராஜ்தாக்கரே

By: Karunakaran Sat, 01 Aug 2020 2:28:58 PM

கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை - ராஜ்தாக்கரே

வரும் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் பூமி பூஜை நடக்கவுள்ளதால் குறிப்பிட்ட 200 பேர் மட்டும் இதில் நேரில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், மக்கள் இப்போது வேறுபட்ட மனநிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

rajthackeray,bhumi puja,ram temple,corona spread ,ராஜ்தாக்கரே, பூமி பூஜை, ராம் கோயில், கொரோனா பரவியது

இந்த நேரத்தில் பூமி பூஜை தேவையில்லை. தற்போதைய நிலைமை இயல்புக்கு திரும்பியதும் 2 மாதங்களுக்கு பிறகு இதை நடத்தியிருக்கலாம். அப்படி இருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சத்தில் இருந்து மக்கள் வெளியேற உதவுவது முக்கியம் என்று ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகள் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் அனைத்தும் குழப்பத்திற்கு வழிவகுக்கின்றன. மக்கள் நிம்மதியாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மீட்க அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :