Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடத்தை ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்க கூடாது .. ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடத்தை ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்க கூடாது .. ராமதாஸ் வலியுறுத்தல்

By: vaithegi Sat, 27 Aug 2022 6:52:17 PM

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடத்தை ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்க கூடாது  ..  ராமதாஸ்  வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளை இயக்க கனரக போக்குவரத்து வாகன உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்கள் தேவைப்பட்டனர். அதனால் இந்த பணியிடத்தில் தகுதியான நபர்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 12 பணிமனைகளில் 400 ஓட்டுநர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் குறைந்தபட்சமாக ஓரு வருடம் அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் காலம் வரை பணியில் இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பணியிடத்தில் நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து கொண்டு வருகின்றனர்.

driver,transport corporation ,ஓட்டுனர் ,போக்குவரத்துக் கழகம்

மேலும் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடத்தை ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் ஓட்டுனர் பணியிடத்தில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் மூலமாக காலியாக உள்ள 400 ஓட்டுனர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Tags :
|