Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாரத்திற்கு ஒரு முறை உயர்நிலை ,மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் ...ராமதாஸ்

வாரத்திற்கு ஒரு முறை உயர்நிலை ,மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் ...ராமதாஸ்

By: vaithegi Sat, 30 July 2022 11:43:21 AM

வாரத்திற்கு ஒரு முறை உயர்நிலை ,மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் ...ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு கொண்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு சில மாதங்களில் அடுத்தடுத்து மாணவ மாணவிகளின் தற்கொலை சம்பவம் அரங்கேறி வருகிறது. அதனால் தமிழக மக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறைக்கு யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி இறப்பு காரணமாக மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் இந்த நேரத்தில் 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

higher secondary students,ramadoss , தன்னம்பிக்கை, உயர்நிலை ,மேல்நிலை மாணவர்கள்,ராமதாஸ்

அடுத்தடுத்து மாணவ மாணவிகளின் தற்கொலை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கல்வியாண்டு தொடங்கிய சில வாரங்களிலேயே மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர் 5 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை வழக்கமான தற்கொலைகள் என ஒதுக்கிவிட முடியாது.

ஆன்லைன் வகுப்புகள் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அதற்காக பழகிவிட்டனர். ஆனால் அதற்குள் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என கலை, விளையாட்டு ஆகிய வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து அதனால் பல பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் வகுப்புகளுக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றன. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலும் பெற்றோர்கள் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். மேலும் மருத்துவ படிப்புகளுக்கு இப்பவே தயாராக வேண்டும் என்று அழுத்தத்தை பெற்றோர்கள் கொடுக்கின்றனர். வாரத்திற்கு ஒரு முறையாவது உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன என்பதற்காக முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். அதேபோல், பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும் எயாரும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :