Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரம் – சென்னைக்கு விரைவில் விமான சேவை என மத்திய அரசு தகவல்

ராமநாதபுரம் – சென்னைக்கு விரைவில் விமான சேவை என மத்திய அரசு தகவல்

By: Nagaraj Thu, 02 Feb 2023 7:39:15 PM

ராமநாதபுரம் – சென்னைக்கு விரைவில் விமான சேவை என மத்திய அரசு தகவல்

டெல்லி: ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி எழுப்பிய கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், 2016ல் தொடங்கப்பட்ட உதான் திட்டத்தின் கீழ், தேவைக்கேற்ப நகரங்களை இணைக்கும் வகையில் விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதான் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் உள்ள கடலோர காவல்படை விமான தளத்தில் இருந்து விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

airline service,chennai,ramanathapuram, ,சென்னை, ராமநாதபுரம், விமான சேவை

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் அல்லது விமான நிலையம் தயாரான 2 மாதங்களுக்குள் எந்தவொரு விமான நிறுவனத்திற்கும் விமானத்தை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று அவர் கூறினார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் உள்ளதால் சென்னையில் இருந்து ராமநாதபுரத்துக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags :