Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய ..ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய ..ராமதாஸ் வலியுறுத்தல்

By: vaithegi Fri, 15 Sept 2023 11:23:50 AM

தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய  ..ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வு கூடாது .. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழகஅரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, தகுதியும், திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளைப் பறித்து விடுகிறது.

அனைவருக்கும் சமநீதியும், சமுக நீதியும் கிடைக்க நேர்முகத் தேர்வு பெருந்தடையாகவுள்ளது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.

ramadoss,interview,tamil govt jobs ,ராமதாஸ் ,நேர்முக தேர்வு ,தமிழக அரசு பணி


ஆந்திராவில் முதல் தொகுதிபணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் 2019-ம் ஆண்டுமுதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் அரசுப் பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இங்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படை யில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags :